Sri Lanka

இலங்கையின் தொழில் முனைவர் 'பெண்களுக்கான ஆசனம் ' எனும் விருப்பத் தேர்வினை, பெண்கள் பேருந்துகளில் பாதுகாப்பாக செல்வதற்கு உதவும் முகமாக உருவாக்கியுள்ளார்.

இலங்கையில் பெண்கள் அநேக நேரங்களில் பாலியல் துஸ்பிரயோக அச்சுறுத்தல்களின் காரணமாக பேருந்துகளில் தனியாக பயணத்தினை மேற்கொள்வதில்லை. இப் பயத்தினை கருத்தில் கொண்டு, உள்ளூர்வாசியொருவர் 'பெண்களுக்கான ஆசனங்களை' பதிவு செய்யும் விருப்பத் தேர்வினை உருவாக்கியுள்ளார் - மேலதிக செலவில்லாமல்.

Read this story in

Publication Date

Sri Lanka’s ‘Lady Seats’ Promote Safe Travel for Women

பூங்குழலி பாலகோபாலன், GPJ Sri Lanka

ஒவ்வொரு மாலை வேளைகளிலும் பண்ணை பேருந்து தரிப்பிடத்திலிருந்து பேருந்துகள் இலங்கையின் வர்த்தக தலைநகரமாக கொழும்பிற்கு செல்கின்றன. இப் பயணமானது எட்டு முதல் ஒன்பது மணித்தியாலங்களானவை.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை – இரவ 9 மணி கடந்துவிட்டது ரேவதி திருநாவுக்கரசு, கி;ட்டத்தட்ட 54 கிலோமீற்றர் (33 மைல்) தூரத்திலிருக்கும் தனது கிராமத்திலிருந்து முச்சக்கர வண்டியில் பயணித்து, இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள வரலாற்று தொன்மை வாய்ந்த நகரத்தின் சந்தை வெளியில் வந்து இறங்குகின்றார்.

அவருக்கு முன்னால் பெரிய பேருந்துகள் நகரத்தின் தெற்க்கு பகுதிக்கு செல்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளன. அவர், தான் ஏற வேண்டிய குறிப்பிட்ட பேருந்தை இனங்கண்டு கொள்கின்றார்.

ஒவ்வொரு வாரமும் பயணத்தினை மேற்கொள்ளும் ரேவதி,யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் வர்த்தக தலைநகரமான கொழும்பிற்கான பயணம் எட்டு மணித்தியாலங்கள் என கூறுகின்றார். அவர் சான்றுபெற்ற கணக்காளராகவதற்காக தனது கல்வியினை மேற்கொள்கின்றார் மற்றும் அவரது பாடக் கோவைகள் வார இறுதியில் நடைபெறுகின்றன.

ஆனால், ரேவதி இளங்கலை மாணவராக, வணிக மேலாண்மையை 2009ல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளும் வேளையில், அவர் தனது பல்கலைக்கழகத்திலிருந்து தனது வீட்டிற்க்கு இன்னுமொரு யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பெண் மாணவி பேருந்தில் தனதருகில் அமரந்து வர சம்மதித்தால் மாத்திரமே வர முடியுமானதாக இருந்தது. தனது தகப்பன் அல்லது சகோதரர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை தன்னுடன் வந்ததாக அவர் கூறினார்.

அவரது குடும்பம், ஏனைய பலரைப் போன்று, அவரது பாதுகப்பை குறித்து சிரத்தையுடையவர்களாக இருந்தார்கள் என அவர் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள பெண் பேருந்து பயணிகள், தாம் ஆண் பயணிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறினார்கள். ரேவதியும் ஒரு முறைக்கும் அதிகமாக இதற்கு ஆளாகியுள்ளார்.

‘பாதுகாப்பற்ற தொடுகைகளுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன்.’ என கூறுகின்றார். ‘தொடுகைகள் மாத்திரமல்ல சில ஆண்கள் என்னுடன் பேசுவதற்கு முயற்சி செய்வதும் அல்லது என்னை முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதையும் கூட’.

ஆனால், தற்போது ரேவதி தனியாக பயணம் செய்கின்றார்.

expand image
expand slideshow

பூங்குழலி பாலகோபாலன், GPJ Sri Lanka

ரேவதி திருநாவுக்கரசு, தான் செல்லவிருக்கும் கொழும்பு பிரயாணத்திற்காக “பெண் ஆசனம்” ஒன்றை பதிவு செய்கின்றார்.

ஆண் பயணிகளின் பொருத்தமற்ற தொடுகைகளை தன்னால் தவிர்க்க கூடுமானதாக உள்ளதாக கூறும் அவர் தனது நன்றிகளை BusSeat.lk. எனும் பெண் பயணிகள் நீண்ட தூர பிரயாணங்களில் ‘பெண்களுக்கான ஆசனங்களை’ பதிவு செய்யும் விருப்பத்தேர்வு அளிக்கும் பேருந்து பதிவு சேவைக்;கு தெரிவிக்கின்றார். இந்த தனிச்சிறப்பு அம்சத்தினால் ரேவதி மற்றும் ஏனைய பெண் பிரயாணிகள் தமது ஆசனம் அல்லது தமக்கு அருகில் உள்ள ஆசனம் ஒரு பெண்; மாத்திரம் அமர்ந்திருப்பதை எந்த வித மேலதிக கொடுப்பனவும் அற்று, உறுதி செய்து கொள்ள முடியும்.

இத் தேர்வு இருப்பதனால் பாதுகாப்பான பயணத்தை மேற் கொள்ளலாமென BusSeat.lk. ஸ்தாபகர் சுபேந்திரன் பிரசாந் கூறுகின்றார். இச் சேவைதான் முதன்முறையாக நாட்டில் ‘பெண்களுக்கான ஆசனம்’ எனும் கருத்துப்படிவத்தை அறிமுகம் செய்தது.

பிரசாந், 28, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருக்கும் வேளையில,; இணையத்தள பேருந்து பதிவு சேவையை குறித்த திட்டத்தை யோசிக்க ஆரம்பித்தார். அது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னராகும்.

முக்கிய நகரங்களுக்கு இடையில் பிராயாணம் செய்யும் பலரைப் போன்று, பிரசாந்திற்கு பேருந்து ஆசனங்களை பதிவு செய்து கொள்ள இரு வழிகள்தான் இருந்தன. ஓரு வழி, பேருந்து முகவரிடமிருந்து தான் புறப்பட வேண்டிய இடத்திலிருந்து அல்லது சென்றடையும் இடத்திலிருந்து ஆசனத்தை பதிவு செய்து சீட்டை வாங்கிக் கொள்வது. ஆனால், பேருந்து முகவர்கள் சிறியதாக தொழில் செய்பவர்களாகவோ அல்லது தனியர் பேருந்து நிறுவனங்களிடத்தில் பயணிகளுக்கான ஆசனங்களை ஓழுங்குபடுத்தி அதை உறுதிபடுத்துபவர்களாக உள்ளார்கள். மற்றொரு வழியானது, ஒரு முகவரை அழைத்து, ஆசனத்தை ஒதுக்கி வைத்து பயணத்தை மேற்கொள்ளும் நாளில், பணத்தை செலுத்துவதாகும்.

ஆனால், இரண்டாவது வழி எப்போதும் செயற்படவில்லை. அநேக நேரங்களில் முகவர்கள் தொலைபேசியில் ஒதுக்கி வைத்த ஆசனத்தை பதிவு செய்யும் வேளையில் கொடுப்பனவு செய்யும் வாடிக்கையாளருக்கு கொடுத்து விடுவார்களென அவர் கூறினார்.

பயணிகள் தமது ஆசனங்களை முன்கூட்டி பதிவு செய்வதை இலகுவாக்குவதே பிரசாந்தின் இலக்காகும். ஆனால், நகர்சேர் பயணிகள் சந்திக்கும் சவால்களை அதிகமாக எண்ணும் வேளையில், பெண்களுக்கு தனித்தன்மை வாய்ந்த தேவை இருப்பதை உணர்ந்ததாக கூறினார்.

2015ல், ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம், இலங்கையில் பொது பேருந்துகள் மற்றும் தொடரூந்துகளில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை குறித்த ஆய்வை நியமித்தது. மொத்தமாக 2,500 பெண்கள் இதற்காக கணக்கெடுக்கப்பட்டதில், 90 சதவீதமான பெண்கள் தாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான அனுபவம் உண்டென கூறினார்கள். இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட இன்னுமொரு விடயமெனில் நான்கு சதவீதமானோரே இச்சம்பவத்தை குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்து அல்லது ஏதாவதொரு விதத்தில் உதவியை நாடியுள்ளார்களெனவும் மூன்றில் ஒரு பெண் தாம் பணியாற்றுகையில் இச் சம்பவம் தமது செயல்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் கூறினார்கள்.

யாழின் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் போட்டியில் சீசன் 3ல் இலங்கை ரூபாய் ஒரு மில்லியனை (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 5,599) முதற் பரிசாக வென்ற ஒரு வருடத்தின் பின்னர் , 2015ல் பிரசாந் BusSeat.lk ஐ ஆரம்பித்தார்.

பிரசாந்தின் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ‘பெண்கள் ஆசனம்’ எனும் தனிச்சிறப்பம்சத்தை பாவிக்க கூடுமானதாக இருந்த போதிலும் சமீபத்திய ஆண்டுகளில் தான் அது மிகவும் பிரபலமானதாக அவர் கூறுகின்றார்.

2018ல் ஏறத்தாழ 450,000 பயணிகள் BusSeat.lk ஐ தமது பயணத்தை பதிவு செய்வதற்காக பயன்படுத்தியுள்ள வேளையில் 15 சதவீதமானோர் பெண்கள் ஆசனம் எனும் விருப்பத் தேர்வை பயன்படுத்தியுள்ளனர்.

BusSeat.lk நீண்ட தூர பிரயாணங்களில் சகலருக்கும் மாற்றங்களை கொண்டு வந்துள்ள போதிலும் விசேடமாக பெண்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக, இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் Yarl IT Hub எனும் இலாப நோக்கமற்ற தளத்தின் ஸ்தாபக உறுப்பினரான பாலதாஸன் சயந்தன் என கூறுகின்றார். ஆண் பயணிகளால் ஏற்படக்கூடிய பாலியல் தொல்லைகளை தமது உறவான பெண் பயணிகள் தவிர்ப்பதற்காக ஆண் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் அருகில் அமர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு ஆளானார்கள். ‘பெண்களுக்கான ஆசனம்’ அப் பிரச்சனையை நிவர்த்தி செய்துள்ளாக அவர் கூறுகின்றார்.

தற்போது இலங்கையிலுள்ள 50 நகரங்களுக்கான பயணப் பதிவுகளை மேற்கொள்ள பயனர்களை BusSeat.lk அனுமதிக்கின்றது. 115 பேருந்து முன்பதிவு முகவர்கள் BusSeat.lk யுடன் தம்மை பதிவு செய்துள்ளார்கள். தமது ஆசனங்களை இணையத்தளத்தினூடாக பதிவு செய்துள்ள வேளையில் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த இயலாத பயணிகளிடமிருந்து கட்டணங்களை பெற்றுக் கொள்வது இவர்களது பணியாகும்.

தனது முகமையகத்தின் கிளைகளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் கொண்டுள்ள பாலசிங்கம் பாலவதனி ஒரு பேருந்து முகவராவார். அவர் தனது முகமையகத்தை, தானும் ‘பெண்கள் ஆசனத்திற்கான’ விருப்பத் தேர்வை பாவித்த பின்னர், BusSeat.lk யுடன் 2017ல் பதிவு செய்தார். இரு நகரங்களுக்கிடையிலான தனது பயணங்களை ஆன்லைன் சேவையானது அதிக பாதுகாப்பானதாகவும் அதிக மன அழுத்தமற்றதாகவும் மாற்றியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எனினும், முகவர்களை போலில்லாமல் BusSeat.lk. ஊடாக பதிவு செய்வதில் பின்னடைவுகள் உள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றார்கள். சிலவேளைகளில் ‘பெண்கள் ஆசனத்திற்கு, அருகில் உள்ள ஆசனம் பெண் பயணி ஒருவர் தெரிவு செய்யாத வேளையில் காலியாக இருப்பதால் பேருந்து உரிமையாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரசாந் கூறுகின்றார்.

தான் பேருந்து உரிமையாளர்களை சந்தித்து, பதிவுகளை செய்வதற்கான பற்றுதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இத் தொழில் முனைவர் கூறுகின்றார்.

இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.