SPECIAL REPORT

உணவு நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரிசி உற்பத்தி வீழ்ச்சி

கடந்த ஆண்டு இலங்கை விவசாயத்திற்கான இரசாயன உரங்களைத் தடை செய்தபோது, தீவின் உணவு விளைச்சலில் அச்சட்டத்தின் தாக்கம் உடனடியாகத் தெரிந்தது.

Read this story in

Publication Date

Publication Date

செட்டிக்குளம், இலங்கை – செல்லன் யோகராசா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த பின்னர் 2014 இல் இலங்கை திரும்பியபோது, அவர் 9 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தீவின் 22 மில்லியன் மக்களின் பிரதான உணவான அரிசியை பயிரிடத் தொடங்கினார். ஒவ்வொரு அறுவடையின் போதும் ஒவ்வொன்றும் 25 கிலோகிராம் (55 இறாத்தல்கள்) எடையுள்ள சுமார் 288 மூட்டை நெல் விளைச்சல் ஒரு கண்ணியமான வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இருந்நது. இருப்பினும், ஒரே இரவில், செல்லானுக்கும் – நெல்லுற்பத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கை தொழிலாளர் படையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் இந்தக் கணக்கீடு தவிடுபொடியானது.

மே 2021 இல், இரசாயன உரங்கள் இல்லாத உலகின் முதல் நாடாக மாறும் புனித நோக்கத்துடன், விவசாய இரசாயனங்களை அரசாங்கம் தடை செய்தது.

ஒரு வருடம் கழித்து, நாடு ஒரு பரந்த பொருளாதார நெருக்கடியுடன் போராடும் அதே வேளையில் அந்த முடிவின் விளைவுகளை அறுவடை செய்யும்போது, அதன் புதிய பிரதமர் உருவாகிக்கொண்டிருக்கும் உணவுப் பற்றாக்குறை குறித்து எச்சரித்துள்ளார்.

இலங்கை அதன் இரண்டு பருவமழைக் காலங்கலும் வருடத்திற்கு இரண்டு முறை நெல்லை அறுவடை செய்கிறது. சிங்களத்தில் “பெரியது” என்று பொருளுடைய மகா என்ற பருவகாலத்தில் நெல் செப்டம்பரில் விதைக்கப்பட்டு மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது, அதே நேரத்தில் யல அல்லது “குறைவான” என்ற பொருளுடைய பருவகாலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைகிறது. கடந்த நவம்பரில் விவசாய இரசாயனத் தடை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், தீவின் உணவு விளைச்சலில் அச்சட்டத்தின் தாக்கம் உடனடியாகத் தெரிந்தது.

பிரதான பயிரான அரிசியில் பொதுவாக தன்னிறைவு பெற்ற இலங்கையின் அரிசி இறக்குமதி, 2020 இல் 15,770 மெட்ரிக் தொன்களிலிருந்து 2021 இல் 147,091 மெட்ரிக் தொன்களாக சடுதியாக உயர்ந்ததுடன் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் அதில் 90% க்கும் அதிகமானளவு இறக்குமதி செய்யப்பட்டது. நாடளாவிய தரவுகள் இன்னும் வெளியிடப்படாத போதும், அரிசி அறுவடை சுமார் 33% குறையும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வட இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் வருடாந்த சராசரி நெல் விளைச்சல் 101,831 தொன்களிலிருந்து 49,218 தொன்களாகக் குறைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நேசரத்தினம் விஷ்ணுதாசன் கூறுகிறார். விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு அவற்றின் கருத்துக்கான எமது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

63 வயதான செல்லன், தனது விளைச்சல் 60% க்கும் அதிகமாக சரிந்ததாக கூறுகிறார். அவரது 9 ஏக்கரில் வெறும் 108 மூட்டை நெல் மட்டுமே விளைந்தது, இதனால் தற்போதைய பருவத்தில் இரசாயன உரங்கள் தேவைப்படாத அவரையினத் தாவரமான நிலக்கடலையை மட்டுமே பயிரிடுவதாக அவர் கூறுகிறார்.

இயற்கை உர வேளாண்மையை விவசாயிகள் எதிர்க்கவில்லை. ஜூலை 2021 இல், கொழும்பை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான வெரிடே ரிஸர்ச் மூலம் நாடளாவிய ரீதியில் நடத்திய கணக்கெடுப்பில், விவசாயிகளில்

மகளிர் உடற்பயிற்சி மையங்கள்- பெண்களுக்கு சொந்தமான வணிகங்களின் புதிய சகாப்தம் படிக்க கிளிக் செய்யவும்

பெரும்பான்மையானவர்கள் (64%) விவசாய இரசாயனங்களிலிருந்து விலகிச் செல்வதை விரும்புவதாகச் சுட்டிக்காட்டினர், ஆனால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் (78%) இந்த மாற்றத்திற்கு ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தைக் கோரினர்.

கணக்கெடுக்கப்பட்ட விவசாயிகளில் 85 சதவீதமானோர் அறுவடை சரிவடையும் என்று கணித்துள்ளனர். வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்தம்பி ஸ்ரீதரன் இயற்கை விவசாயம் வரவேற்கத்தக்கது ஆனால் விவசாயிகள் மீது, குறிப்பாக ஒரே இரவில் கட்டாயப்படுத்தக் கூடாது, எனக் கூறுகிறார்.

“சேதன விவோயத்துக்கு மண்ணும் மனிதரும் பழக்கப்பட சில காலம் எடுக்கும்.’

வெரிடேயின் ஆராய்ச்சியின் படி, 94 சதவீத நெல் விவசாயிகள் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதுடன் பலருக்கு இயற்கை சேதன மாற்றுகளைப் பற்றிய போதிய அறிவு இல்லை. கந்தையா கனகலிங்கம், 62, கடந்த 25 வருடங்களாக நெற்பயிர் செய்கிறார், ஆனால் இரசாயன உரங்கள் இல்லாமல் விளைச்சலைத் தக்கவைக்கப் போராடினார். “எனது இத்தனன வருட அனுபவத்தில் கடந்த போகத்தில் தான் பாரியளவு விளைச்சல் குறைவு,” முகவாட்டத்துடன் பீடைநாசினியை வளரும் தண்டுகளுக்குத் தெளித்தபடியே அவர் கூறுகிறார். உரங்களைக் குறைவாகப் பயன்படுத்துவதால் மண் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவை வெளிர் மற்றும் வடிகால் நிறத்தில் உள்ளதாக அவர் கூறுகிறார்.

உள்ளுர் உற்பத்தியை மீட்டெடுத்து இறக்குமதிச் செலவைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் விவசாய இரசாயனங்களுடன் இப்போதைக்கு சமரசமாக வேண்டும் என யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம் கூறுகிறார்.

“உயிர் வாழ உணவு அவசியம்,” என்று அவர் கூறுகிறார்.

விவசாயிகளிடையே நீண்டகால சிறுநீரக நோயைச் சமாளிக்க மற்றும் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் குறைவதைத் தவிர்க்கும் விதமாக விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்ட போதிலும் நெல் விநியோகங்கள் குறைவாகவே உள்ளன. இதற்கு உலகளாவிய விலை உயர்வும் ஓரளவுக்கு காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலக உரங்களின் விலை கடந்த ஆண்டை விட பாதிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது உக்ரைன் நெருக்கடியின் ஒரு விளைவாகவும் கருதப்படுகிறது. ஏனேனில் இரசாயன உரத்தில் முக்கிய மூலப்பொருளான பொட்டசிய உற்பத்தியாளர்களாக ரஷ்யாவும் பெலாரஸும் உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தானங்களில் இருக்கின்றன. அத்துடன் இலங்கையின் தீர்ந்து விட்ட பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். வவுனியா மாவட்டத்தில் உள்ளுர் விவசாயிகளால் விரும்பப்படும் விலை குறைந்த நைட்ரஜன் உரமான யூரியாவின் விலை 25 மடங்காக அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளரான அன்டனி கமிலஸ் மதுசன் தெரிவிக்கிறார்.

’50 அல்லது 100 கிலோ உரம் வாங்கிய விவசாயிகள் தற்போது விலையைக் கேட்டவுடன் 5 அல்லது 10 கிலோ உரத்தை மாத்திரமே வாங்குகின்றனர்.’

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

கதை தலைப்பு: கந்தையா கனகலிங்கம் மே மாதத்தின் நடுப்பகுதியில் தனது நெற்பயிரில் இரசாயன உரத்தை தெளிக்கிறார். கடந்த ஆண்டு இரசாயன உரங்களுக்கு அரசாங்கம் குறுகிய கால தடை விதித்ததைத் தொடர்ந்து பற்றாக்குறையானது இந்த ஆண்டு தேசிய அரிசி உற்பத்தியை அதிகளவில் குறைத்துள்ளது.

கடந்த வருட தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்குவதாக அறிவித்தது, ஆனால் இதுவரை தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என வவுனியா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நாடளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காலதாமதத்திற்கு வழிவகுத்தது என்கிறார் நேசரத்தினம். அடுத்த பருவத்தில் உரங்களின் விலை குறையும் பட்சத்தில் அல்லது அரசாங்கத்தால் மேலும் மானியம் வழங்கப்படாவிட்டால், செல்லன் தனது 9 ஏக்கர் நிலப்பரப்பில் 1.5 ஏக்கரில் நெல் பயிரிட விரும்புகிறார். மற்ற விவசாயிகளும் இதே போன்ற குறைத்தால் அது தீவின் உணவு நெருக்கடியை நீடிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், அரிசியின் சந்தை விலையும் உயர்ந்துள்ளது – மே 2021 இல் கிலோகிராம் ஒன்றுக்கு 145 இலங்கை ரூபாவில் ($0.40) இருந்து 230 ரூபாயாக ($0.64) உயர்ந்துள்ளது. பச்சரிசி, தேங்காய்ப்பால் மற்றும் இலைக் கீரையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகைக் கூழான இலைக் கஞ்சியை விற்கும் செல்லத்துரை மோகனாதேவி, 10 ரூபாயால் ($0.03) உயர்த்தியபோது தனது வாடிக்கையாளர்கள் குறைந்து போனதைக் கண்டார். “தற்போதைய விலையுடன் எப்படி வாழ்வது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார். அவர் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத் தவிர்க்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டரில், இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அறுவடை குறைந்து வருவதை ஒப்புக்கொண்டார். “எங்கள் மாதாந்திர உணவு இறக்குமதிக்கு சுமார் $150 மில்லியன் தேவைப்படுகிறது,” என்று அவர் எழுதினார். “எங்கள் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு போதுமான உரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஆண்டுக்கு சுமார் $600 மில்லியன் தேவைப்படுகிறது. இதைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாடி நாங்கள் செயற்பட்டு வருகிறோம்” என்றார்.

இலங்கையின் நெருக்கடி, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் மோசமடைந்தாலும், உலகளாவிய அவசரநிலையையும் பிரதிபலிக்கிறது. உலகளாவிய பசியின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது, கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன் 135 மில்லியனிலிருந்து மே 2022 வரை 276 மில்லியனாக இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. “இன்றைய விலையில், விவசாயிகளால் விதைகள், எரிபொருள் மற்றும் உரங்கள் வாங்க முடியாது,” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த மாதம் தெரிவித்தார். “உக்ரைனின் உணவு உற்பத்தியையும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் உற்பத்தி செய்யும் உணவு மற்றும் உரத்தையும் உலகச் சந்தைகளில் – போருக்குப் பிறகு மீண்டும் ஒருங்கிணைக்காமல் உணவு நெருக்கடிக்கு பயனுள்ள தீர்வு எதுவும் இல்லை.”

செல்லனின் 90 வயதான தாயார், செல்லன் வள்ளியம்மை, கடைசியாக இலங்கையில் இப்போது போன்ற ஒரு உணவு நெருக்கடி பல தசாப்தங்களுக்கு முன்பு 1974 இல் ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார். கிராம மக்கள் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரைக்காக வரிசையில் நிற்க சூரியன் உதிக்கு முன் எழுந்தனர். பசியால் வாடும் குழந்தைகளைக் கண்டு தாய்மார்கள் விரக்தியடைந்தனர். அவள் நினைவுகளில் கூட அந்த நேரத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை. தன் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் இப்படிப்பட்ட அனுபவத்தை அனுபவிக்க விரும்புவதில்லை.

தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories