அல்வாய், ஸ்ரீலங்கா – மாணவர்கள் வரிசையாக ஒரு அமைதியான விளையாட்டு மைதானத்தில், ஒவ்வொருவராக, முன்னே படியெடுத்து வைக்கின்றார்கள், அவர்களின் பயிற்ச்சியை ஆரம்பிப்பதற்க்கு அனுமதிக்கும் அடையாளமாக ரமேஸ் ஆசி கூறுகின்றார்.
பின்னர். அவர்களின் கரங்களை, குத்துச்சண்டை கையுறைகளுடன் தங்களது காதுகள் வரை உயர்த்துகிறார்கள் – மற்றும் கண்களில் உக்கிரமமான பார்வையுடன் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்த வண்ணமாக மாணவர்கள் வீச்சுகளை (குத்துகளை) ஒருவரொடொருவர் பறிமாறிக் கொள்கின்றார்கள். கால்களின் அசைவினால் எழும்பும் தூசானது (குத்துச்சண்டை) போராட்டதிலெழும்பும் குரலுடனும், ஒவ்வொரு குத்துடனும் எழும்பும் ஓசையுடனும் கலந்துவிடுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டம், அல்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ரேவடி கடற்கரையில், பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட குத்துச்சண்டை வீரரான ரமேஸ், தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக, ரமேஸ் அவரது குத்துச்சண்டை பயிற்ச்சியை இலவசமாக, வாரத்தில் நான்கு நாட்கள் தருகின்றார். அவரது மாணவர்கள் பலர் பயிற்ச்சிக்கான கட்டணங்களை கொடுக்க இயலாதவர்களாக உள்ளார்களென கூறுகின்றார். ஒவ்வொரு வருடமும் புதிய இளைஞர்கள் இணைந்து கொள்வதாகவும், தற்போது 35 மாணவர்களை பயிற்றுவிப்பதாகவும், சில வேளைகளில் காலணிகள் மற்றும் கையுறைகளை தனது சொந்த பணத்தில் வாங்கி கொடுப்பதாகவும் கூறினார்.
அது மீளத் தரும் ஒரு வழியாகும் என அவர் கூறுவதோடு, உள்ளுர் சமூகத்தில், அவரது பணி பெருமைக்குரிய விடயமாக உள்ளது. ஏனெனில், எனது மாணவர்கள் தற்போது பதக்கங்களை வென்ற குத்துச்சண்டை வீரர்களாக உள்ளார்கள் என கூறினார்.
ரமேஸ், குத்துச்சண்டையில் தனது சிறு பிராயம் முதல் ஆர்வமுடையவராக, இவ் விளையாட்டை தொலைகாட்சியில் பார்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அவர் தனது பயிற்சியை தனது 15 வயதில் ஆரம்பித்துள்ளார்.
பின்னர், 12 தங்கப் பதக்கங்களை ஸ்ரீலங்காவின் வடக்கு மாகாணத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளிலும் நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசியமட்ட போட்டிகளிலும் வென்றுள்ளார். இறுதியாக அவர் 2016ம் ஆண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அனைத்து நேரங்களிலும் இவ்விளையாட்டிலுள்ள அபாயங்களுடன் போராடியுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் அவர் காயங்களுக்கு இலக்காகியுள்ளார். 2010ம் ஆண்டு கண்டியில் நடந்த போட்டியில் தலையில் பட்ட அடியினால் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு உள்ளாகியதாக கூறினார்.
‘எனது மனைவியை குத்துச்சண்டை போட்டிகளுக்கு நான் அழைத்து செல்ல விரும்புவதில்லை’ எனும் அவர் மேலும் கூறியதாவது “எனது தாயார் குத்துச்சண்டை போட்டி நாட்களில், ஆலய வாயில்களுக்கு வெளியே நின்று தனது மகனுக்காக பிரார்த்திப்பார்”.
இவ்விளையாட்டில் ஆபத்துகள் இருந்த போதிலும், ஸ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தம் 2009ல் நிறைவுக்கு வந்த பின்னர், குத்துச்சண்டை மீண்டுமொரு எழுச்சியை கண்டுள்ளது. இளைஞர்கள் அதிக ஈடுபாடு செலுத்துவதை கண்டு, அவர்களை பயிற்றுவிப்பதற்கு ரமேஸ் முன் வந்துள்ளார்.
ரமேஸ், “எனது பயிற்றுவிப்பு இலவசமானது. ஒரு வழியில் எனது பின்னணியின் நிமித்தமாக மீளத்தருவதாக அமைந்துள்ளது” என கூறினார்.
‘எனது சிறு பிராயத்தில் நான முகங்கொடுத்த பொருளாதாரச் சிக்கல்களை கருத்தில் கொண்டு நான் இலவசமாக பயிற்றுவிக்கின்றேன்’ என கூறினார். சில மாணவர்கள் வெகு தூரத்திலிருந்து பயணம் செய்கின்றார்கள். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை, ஆகவே நான் என்னால் இயன்றளவு உதவி செய்கின்றேன் என கூறுகின்றார்.
குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் இராஜதுரை கிருஷ்ணமூர்த்தி, அநேக தமிழ் சமுதாயத்தை சேர்ந்த பெற்றோர் பயிற்றுவிக்க அல்லது விளையாட்டு உபகரணங்களிற்கு பணம் செலவழிக்க தயாராக இல்லை என கூறினார்.
‘ரமேஸின் இச் சமூக செயற்பாடு மாணவர்களை ஊக்குவிக்கும்’ என கிருஷ்ணமூர்த்தி கூறுகின்றார்.
குணசேகரம் டிலைக்சன், 18, கடந்த வருடத்தில் ரமேஸிடம் பயிற்சி பெற்றுள்ளார். அவர் தனது உடலமைப்பிலும் மனநிலையிலும் உறுதியான மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
கூச்ச சுபாவத்தின் நிமித்தமாக எனது பாடசாலை நாட்களில், நான் நிகழ்வுகளில் பங்கெடுக்கவில்லை’. ஏன கூறுகின்றார். ‘ஆனால், தற்போது எனக்கு கூச்சமில்லை மற்றும் நான் சகல நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றேன்.’
அத்துடன் அவர் சிறு வயதில் சுவாசிப்பதிலும் இளைப்பு நோய் பிரச்சினையும் இருந்த தனது சகோதரனால் ஊக்குவிக்கப்பட்டார்.
‘ஆனால், அவருக்கு குத்துச்சண்டை பயிற்சியை ஆரம்பித்த பிறகு, அது முற்றிலுமாக நின்று விட்டது’ என கூறும் டிலைக்சன் மேலும் ‘குத்துச்சண்டை தனக்கு சிகிச்சையாக அமைந்தது’ என்றார்.
டிலைக்சன் கூறுகையில் தான் ரமேஸிடம் பயிற்சி பெறுவது ரமேஸின் கீர்த்தியினால் மாத்திரமல்ல, ஆனால் அவரின் விநயம் மற்றும் அவரது மாணவர்களின் பொருளாதார போராட்டங்களை விளங்கிக் கொள்ளும் குணத்தினாலும் என்றார்.
ரமேஸ் தனது மாணவர்களுக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ள போதிலும் உள்ளூர் பெண்களுக்கான தற்காப்பு குத்துச்சண்டை பயிற்சியையும் நிறுவ உள்ளார். அவர் இதற்கான உதவியினை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள விளையாட்டு அமைச்சிடமிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
மாணவர்கள் பாரிய வெற்றிகளை இவரின் பயிற்றுவிப்பினூடக கண்டுள்ளனர். உள்ளூர் குத்துச்சண்டை போட்டிகளில் குணசேகரம் குணசோதி, 23, 2016ம் ஆண்டு தங்க பதக்கத்தையும் இந்த ஆண்டு வெள்ளி பதக்கத்தையும், ஸ்ரீதரன் சிவவிஷ்னு, 20, இவ்வருடத்தில் தங்க பதக்கத்தையும் வென்றுள்ளார்கள்.
ஜொசப்பின் அந்தனி ஜிபிஜே> இக் கட்டுரையை தமிழிலில் மொழி பெயர்த்தார்.