மீள்வெளியீடு

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மீள்வெளியீடு பங்காளிகளும் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்:

உங்கள் நிறுவனம் சட்டபூர்வமான, பதிவு செய்யப்பட்ட  அமைப்பாக இருக்க வேண்டும். முதன்மை இணையத்தளத்தில் உங்கள் வெளியீடு எப்போது தொடங்கப்பட்டது, உங்கள் வெளியீட்டிற்காகப் பணியாற்றுபவர்கள், உங்கள் பதிப்புரிமை மற்றும் வெளியீட்டாளருக்கான தொடர்புத் தகவல்கள் அடங்கிய ஒரு பக்கத்திற்கான முக்கிய இணைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். குளோபல் பிரஸ் மீள்வெளியீடு அனுமதிகளை மறுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது

மீள வெளியிடப்படும் கதைகள் பின்வரும் அனைத்து வழிகளிலும் முக்கியத்துவத்துடனும் வெளிப்படையாகவும் குளோபல் பிரஸ் ஜேர்னலுக்கு கௌரவமளிக்க வேண்டும்:

a) நிருபரின் பெயர் கதையின் மேலே சேர்க்கப்பட வேண்டும்.
b)
“இந்த கதை முதலில் குளோபல் பிரஸ் ஜேர்னலால் வெளியிடப்பட்டது”, என ஒரு வரி கதையின் மேலே சேர்க்கப்பட வேண்டும்.
c)
globalpressjournal.com இல் ஒரு மீத்தொடுப்பு சேர்க்கப்பட வேண்டும் மற்றும் அசல் கதையுடன் இணைக்கப்பட வேண்டும்.
d)
கதையின் முடிவில் பின்வரும் மொழி சேர்க்கப்பட வேண்டும்: “குளோபல் பிரஸ் ஜேர்னல் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட சுயாதீன செய்திப் பணியகங்களில் உள்ளூர் பெண் நிருபர்கள் கொண்ட விருது பெற்ற சர்வதேச இலாப நோக்கற்ற செய்தி வெளியீடாகும்.

கதையின் முன்னணிப் புகைப்படம் கதையுடன் வெளியிடலாம். ஒவ்வொரு
கதைக்கும் ஒற்றை .jpg படம் கிடைக்கிறது. அனைத்து புகைப்படங்களும்
குளோபல் பிரஸ் ஜேர்னல் நிருபர்களால் எடுக்கப்பட்டவை, அத்துடன் அவை
ஒவ்வொரு கதைக்கும் நேரடியாகத் தொடர்புபட்டவை. கதையுடன் வழங்கப்பட்ட
வேறு எந்த குளோபல் பிரஸ் ஜேர்னல் படங்களையும் கோர, நீங்கள் ஒற்றைப்
பயன்பாட்டு உரிமத்தைப் பற்றி விசாரிக்க
[email protected] க்கு மின்னஞ்சல் செய்யலாம்.

கதைகளைத் திருத்தவோ மாற்றவோ கூடாது. மீள் வெளியீடு செய்யும்
பங்காளிகள் குளோபல் பிரஸ் ஜேர்னல் கதையின் எந்த விடயத்தையும் மேலதிக அனுமதியின்றி திருத்தலாகாது. திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கான அனுமதிகளை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் கோருங்கள். எல்லா அசல் இணைப்புகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

கதைகள் வேறு ஒரு மொழியில் மொழிபெயர்க்கப்படலாகாது. குளோபல்
பிரஸ் ஜேர்னல் கதைகள் ஆங்கிலத்திலும், நிருபரின் உள்ளூர் மொழியிலும்
வெளியிடப்படுகின்றன. நீங்கள் அவ்விரண்டில் ஒரு பதிப்பையோ அல்லது அந்த இரண்டு பதிப்புகளையுமோ மீள வெளியிடலாம், ஆனால் நீங்கள் ஒரு குளோபல் பிரஸ் ஜேர்னல் கதையை வேறு ஒரு மொழியில் மொழிபெயர்க்கக்கூடாது. வேறொரு மொழியில் ஒரு கதையைக் கோர நீங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த மொழிபெயர்ப்பு சேவைக்கு கட்டணம் அறவிடப்படுகின்றது.

கதைகள் ஒன்றிணைக்கப்படவோ, விற்கப்படவோ கூடாது. மீள் வெளியீடு
செய்யும் பங்காளிகள் தளத்தில் கதை (மீள) வெளியிடப்பட்டதும், கதைகள் வேறு எந்த செய்தி நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ, அல்லது ஒன்றிணைப்பதற்கோ வழங்கப்படலாகாது.

கதைகள் www.globalpressjournal.com இலிருந்து நகலெடுத்து
ஒட்டப்படலாகாது. மீள் வெளியீடு செய்யும் பங்காளிகள் கதைகள் மற்றும்
புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாகப் பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் கோரிக்கை மிகக் குறுகிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனின் கீழே உள்ள குறிப்புகள் மற்றும் கருத்துகளில் இதைக் குறிப்பிடவும் அல்லது உங்கள் மின்னஞ்சலின் தலைப்பு வரியில் சேர்க்கவும்.

சமூக ஊடகங்களில் கதைகளைப் பகிரும்போது குளோபல் பிரஸ்
ஜேர்னலின் பெயரைக் குறிப்பிட வேண்டும். ட்விட்டரில் குளோபல் பிரஸ் ஜேர்னல் கதைகளைப் பகிரும்போது @globalpress ஐக் குறிக்கவும். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் கதைகளைப் பகிரும்போது @globalpressjournal ஐ குறிக்கவும்.

கதை பகுப்பாய்வு மற்றும் வாசகர் கருத்துகளை வழங்குதல்.
மறுபிரசுரம் செய்யப்பட்ட கதையை இணையத்தில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை, கதை தொடர்பான வாசகர் ஈடுபாடு மற்றும் பிற அளவீடுகள் குறித்த தகவல்களுக்கு குளோபல் பிரஸ் பிரதிநிதிகள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

  • (டைப் செய்து கையொப்பமிடுக):
  • குளோபல் பிரஸ் செய்திச் சேவைக் குழு உறுப்பினர் ஒருவர் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்வார்.